பான் இந்திய நட்சத்திர நடிகர்களான தனுஷ்- நாகார்ஜுனா -ராஷ்மிகா மந்தானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ குபேரா ‘ படத்திலிருந்து,’ ட்ரான்ஸ் ஆஃப் குபேரா’ எனும் பெயரில் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
பொருளியல் கலந்த உலகியல் வாழ்க்கைக்கும்… பற்றற்ற ஆன்மீக வாழ்க்கைக்கும் .. இடையேயான மன போராட்டத்தை சித்தரிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பிரத்யேக காணொளியில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தயாராகி எதிர்வரும் ஜூன் மாதம் இருபதாம் திகதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தானா, ஜிம் ஷெர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.