Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சாகச நாயகன் அஜித் குமார்

December 18, 2022
in Cinema, News
0
அமைதிக்கு முன் ஒரு புயல் | வைரலாகும் அஜித் புகைப்படம்

நடிகர் அஜித் குமார் அண்மையில் தொடங்கிய உலகளவிலான சாகச பயணத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழ்த் திரையுலகில் நடிப்பால் மட்டும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமராமல், தனது தனித்திறமைகளாலும் மக்களிடத்தில் பேரன்பை சம்பாதித்திருப்பவர் அஜித் குமார்.  

சினிமாவில் அறிமுகமாகும்போதே பந்தயக் கார்களை இயக்குவதில் பேரார்வம் கொண்டிருந்த அஜித் குமார், இதற்கான தொடக்க நிலை போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றதுடன், பல முறை விபத்துகளையும் சந்தித்து சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார். 

சினிமா, கார் பந்தய விளையாட்டு என இரண்டு குதிரைகளிலும் லாவகமாக சவாரி செய்த அஜித், ரசிகர்களால் அன்பாக ‘தல’ என அழைக்கப்படுகிறார்.

கல்லூரியில் பட்டப்படிப்பை பயிலும் இளம் பொறியியல்துறை மாணவர்களிடத்தில் உள்ள ஆய்வு மனப்பான்மையை உத்வேகப்படுத்தி, சக்தி மிக்க ட்ரோன்களை கண்டறிய காரணமாக இருந்துள்ளார், அஜித் குமார். 

அத்துடன் மாணவர்கள் கண்டறிந்த ட்ரோன்களை வேளாண்மைக்காக விதை நெல் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தூவுவது போன்ற என பல அரிய பணிகளுக்கு பயன்படுத்த ஆலோசனை வழங்கியதுடன், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளார்.

திரைத்துறையில் பணியாற்றிக்கொண்டே தன் வாழ்வின் லட்சியத்தை அடைவதற்கான பாதையை உருவாக்கிக்கொண்டவர், அஜித் குமார்.

இவர் தற்போது தனது நடிப்பில் தயாராகி பொங்கலன்று வெளியாகவிருக்கும் ‘துணிவு’ படத்தில் நடித்து முடித்த பின்னர், புதிய படத்தில் நடிப்பதற்கு முன் கிடைத்த ஓய்வு நேரத்தை, தனது சாகச பயணத்துக்காக பயன்படுத்திக்கொள்ள எண்ணி, சர்வதேச அளவிலான சாகச பயணத்தை தொடங்கியிருந்தார்.

அதன்படி, மோட்டார் சைக்கிளில் உலகம் முழுவதையும் வலம் வர வேண்டும் என்ற அவருடைய திட்டத்தின் முதல் கட்டம் அண்மையில் நிறைவடைந்திருக்கிறது. 

இது தொடர்பாக அஜித்தின் நண்பரும் மேலாளருமான சுரேஷ் சந்திரா ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அதில் “அஜித் குமார் தனது உலக சுற்றுப்பயணத்தில் முதல் கட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணித்து நிறைவு செய்திருக்கிறார். அவர் இந்தியாவில் எங்கு பயணம் செய்தாலும், அவருக்கு கிடைக்கும் பேரன்பு, அனைத்து சாகச ரைடர்களுக்கும் கிடைத்த பெருமையான தருணம்” என குறிப்பிட்டுள்ளார்.

தனது திரையுலக நட்சத்திர அந்தஸ்தை முன்னிறுத்தி தொடர்ந்து திரைத்துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல், தன் ஆத்மார்த்த விருப்பமான சாகச பயணத்தை மேற்கொண்ட அஜித் குமாரை, அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரும் ‘சாகச நாயகன்’ என அழைத்து மகிழ்கின்றனர்.

Previous Post

அவதார்: தி வே ஒஃப் வோட்டர் – திரை விமர்சனம்

Next Post

ஒரு அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க தனுஷ்க குணதிலகவுக்கு நீதிமன்றம் அனுமதி

Next Post
அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை வீரரை மீட்பதில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி

ஒரு அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க தனுஷ்க குணதிலகவுக்கு நீதிமன்றம் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures