சவுதி அரேபியாவின் ரியாத் நகரின் வட பகுதி, காஸிம் பிராந்தியத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றின் மீது நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புரைதா தரபிய்யா வீதியிலுள்ள சோதனைச் சாவடி மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரியொருவரும், பங்களாதேஷ் நாட்டவர் ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.
காஸிம் பிராந்தியம் வஹாப் பல்கலைக்கழகம் அமையப் பெற்றுள்ளதனால், சவுதியிலுள்ள முஸ்லிம்களின் முக்கிய பகுதியாக கருதப்படுவதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
காஸிம் பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் அல்கெய்தா மற்றும் யெமன் பயங்கரவாத அமைப்புக்களில் இணைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவருவதாகவும் கூறப்படுகின்றது.
