கமல் மகள்குறைந்த காலத்தில் திறமையான முன்னணி நடிகையாக என்னை நிலைநிறுத்தி இருக்கிறேன். கமல்ஹாசன் மகள் என்பது சினிமாவில் எனது அறிமுகத்துக்கு மட்டும் பயன்பட்டது. கடைசிவரை கமல் மகள் என்ற அந்தஸ்து உதவாது என்றும் முதல் வாய்ப்பு வேண்டுமானால் எளிதாக கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்றும் எனது தந்தை கூறி இருக்கிறார். அதை மனதில் வைத்து செயல்படுகிறேன்.
எனது தந்தை எல்லா விஷயங்களையும் கற்று இருக்கிறார். நடிப்பு, பாடல், இயக்கம் என்று எல்லாவற்றிலும் அவருக்கு அனுபவம் இருக்கிறது. அதுபோல் எனக்கும் எல்லாவற்றையும் கற்று பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. வட இந்திய, தென் இந்திய மொழி படங்கள் என்று பார்க்காமல் எல்லா மொழிகளிலும் நடித்து பெயர் வாங்குவேன்.
சவாலான வேடம்சவாலான வேடங்களில் நடித்து எனது திறமையை வெளிப்படுத்த ஆர்வம் இருக்கிறது. அப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்களுக்காக காத்து இருக்கிறேன். அது எந்த மொழி படமாக இருந்தாலும் நடிப்பேன்.’’
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.