2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்த யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
