சர்வதேச நாணய நிதியம் 2016 இல் இலங்கைக்கு மூன்று வருட கால விஸ்தரிக்கப்பட்ட நிதியில் இரண்டாம் கட்ட கடன் உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிதி வசதியில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணங்கியிருந்ததுடன் அதில் 1 பில்லியன் டொலர்களை ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியிருந்தது.
இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்கும் சாத்தியம் பற்றி நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்மன் லெகார்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான அண்மைய முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்துக்கு இந்த சந்திப்பின்போது விளக்கமளித்துள்ளார்.

