Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2024 விருதுகள்

January 27, 2025
in News, Sports, முக்கிய செய்திகள்
0
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2024 விருதுகள்

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் வரிசையில் இன்று வெளியிடப்பட்ட 3 விருதுகளில் இரண்டு விருதுகளை இந்தியர்கள் வென்றெடுத்தனர்.

எதிர்பார்க்கப்பட்டவாறு இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவும் மகளிர அணியின் அதிரடி நாயகி ஸ்ம்ரித்தி மந்தனாவும் ஐசிசி விருதுகளை தமதாக்கிக்கொண்டனர்.

மற்றைய விருது ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய்க்கு சொந்தமானது.

வருடத்தின் சிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கும் வருடத்திசிறந்த ஐசிசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருது ஸ்ம்ரித்தி மந்தனாவுக்கும் கிடைத்துள்ளது.

வருடத்தின் சிறந்த ஐசிசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது ஆப்கானிஸ்தான் வீரராக அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் தெரிவானார். 

இந்த மூன்று விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட இலங்கையர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு கமிந்து மெண்டிஸும்  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கையின் குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க ஆகியோரும் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு சமரி அத்தபத்துவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.  

அவர்கள் நால்வருக்கும் அதிர்ஷ்டம் கிட்டவில்லை. 

சிறந்த ஐசிசி டெஸ்ட் வீரர் பும்ரா

வருடத்தின் சிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா தெரிவானார்.

13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பும்ரா ஐந்து 5 விக்கெட் குவியல்களுடன் 71 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அவரது சராசரி 14.32ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 30.16ஆகவும் இருந்தது.

கடந்த வருடம் மற்றெல்லா பந்துவீச்சாளர்களையும் விட நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிசிறந்த ஆற்றல்களை பும்ரா வெளிப்படுத்தியிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அவர் பதிவு செய்த 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் என்பதே அவரது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியாக கடந்த வருடம் அமைந்திருந்தது.

ஸ்ம்ரித்தி மந்தனா

2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐசிசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்ம்ரித்தி மந்தனா தெரிவானார்.

கடந்த வருடம் 13 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்த ஸ்ம்ரித்தி மந்தனா 4 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 747 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 4 சதங்கள் குவித்த முதலாவது வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா ஆவார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இது ஒரு சாதனையாகும்.

அஸ்மத்துல்லா ஓமர்ஸாய்  

வருடத்தின் சிறந்த ஐசிசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தானின் மத்திய வரிசை வீரரும் சகலதுறை வீரருமான அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் தெரிவானார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது சகலதுறை ஆட்டத்தில் முத்திரை பதித்த அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், கடந்த வருடம் சகலதுறைகளிலும் அதீத ஆற்றல்களை வெளிப்படுத்தி இந்து விருதுக்கு சொந்தக்காரரானார்.

கடந்த வருடம் 14 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஓமர்ஸாய், 417 ஓட்டங்களைப் பெற்றதுடன் 17 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.

Previous Post

77 ஆவது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

Next Post

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியீடு

Next Post
வெற்றிமாறன் தயாரிக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியீடு

வெற்றிமாறன் தயாரிக்கும் 'பேட் கேர்ள்' படத்தின் டீசர் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures