சரியான நேரத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியடையச் செய்ய நிபந்தனைகள் விதிக்கப்படக் கூடாது. நிபந்தனைகள் எதனையும் விதிக்காது கூட்டு எதிர்க்கட்சி இணைந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு இணைந்து கொண்டால் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வர்.
மலர்மொட்டுக்கு தேவையான வகையில் அரசாங்கத்தை விட்டு விலகி விட முடியாது. அரசாங்கம் ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது. தேவையான நேரத்தில் ஆளும் கட்சியிலிருந்து சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விலகிக் கொள்வார்கள்.
அனைவரும் இணைந்து கட்சியை வெற்றி பெறச் செய்யவே முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.