Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சராசரிக் குடும்பத்தின்வாழ்க்கைச் செலவுக்குரூபா 17,000 போதுமா?

October 5, 2017
in News, Politics
0

தற்­போ­தைய சூழ­லில் ஒரு குடும்­பத்­தின் மாதாந்­தச் செல­வுக்கு 17 ஆயி­ரம் ரூபா போது­மா­ன­தா என்று கேள்வி எழுப்­பி­யுள்ள மக்­கள் விடு­தலை முன்­னணி, விலைக் குறைப்­புக்­களை மேற்­கொள்­ளா­விட்­டால் அர­சுக்கு எதி­ரா­கப் போராட்­டம் நடத்­தப்­ப­டும் என்று தெரி­வித்­துள்­ளது.
மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுனில் ஹந்­துன்­நெத்தி கலந்துகொண்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
அடிப்­ப­டைத் தேவை­கள் அனைத்­தி­ன­தும் விலை அதி­க­ரித்­துள்­ளது. அன்­றாட வாழ்க்­கையை குறைந்த பணத்­தில் அனு­ப­விக்­கும் அதி­க­மான மக்­கள் துன்­பப்­ப­டு­கின்­ற­னர். விலை உயர்­வைக் குறைக்­காது தேங்­காய்­க­ளுக்கு நிறம் பூசும் வேலை­டய அரசு முன்­னெடுத்து வரு­கின்­றது. கடந்த ஆண்­டு­டன் பொருள்­க­ளின் விலை­யை ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு அத்­தி­ய­வ­சியப் பொருள்­க­ளின் விலை 36 வீதத்­தால் உயர்­வ­டைந்­துள்­ளது.
கொழும்பு நுகர்­வோர் அதி­கார சபை­யின் கணக்­கீட்­டின் படி நான்­கு­பேர் கொண்ட குடும்­பத்துக்கு மாத­மொன்­றுக்கு 43 ஆயி­ரம் ரூபா தேவைப்­ப­டு­கின்­றது என்­றும், கொழும்­பில் நான்கு பேர் கொண்ட சாதா­ரண குடும்­பத்­தின் மாதாந்தச் செல­வாக 60 ஆயி­ரத்து 364 ரூபா செல­வா­வ­தா­க­வும் சுட்­டிக்­காட்­டி­ யுள்­ளது. அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்­பத்­துக்கு மாதாந்­தம் 14 ஆயி­ரத்து 196 ரூபா செல­வா­வ­தா­க­வும் கொழும்­பில் நான்கு பேர் கொண்ட சாதா­ரண குடும்­பத்­துக்கு 17 ஆயி­ரத்து 308 ரூபா செல­வா­வ­தாக கூறு­கின்­றார். இந்தக் கணக்­கெ­டுப்புத் தவ­றான வகை­யில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த அர­சும் முன்­னைய ஆட்­சி­யைப் போலவே செயற்­பட்டு வரு­கின்­றது. இந்த அரசு தூர­நோக்­கு­டன் செயற்­படவேண்­டும். வளங்­களை விற்­ப­தன் மூல­மும், விலை அதி­க­ரிப்­பின் மூல­மும் அர­சைப் பலப்­ப­டுத்தி கொள்­வ­தன் மூல­மும் வரி­க­ளின் மூல­மாக மக்­க­ளின் பணத் தைச் சுரண்­ட­வுமே கவ­னம் செலுத்தி வரு­கின்­றது.
எதிர்­வ­ரும் சில ஆண்­டு­க­ளில் இலங்­கை­யில் பெரிய பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­ப­டக் கூடும். சாதா­ரண மக்­க­ளின் மூல­மாக இந்த நிலமை உரு­வா­க­வில்லை. வெள்ளை உடை­களை அணிந்து கொண்டு மக்­கள் பிர­தி­நி­தி­க­ளாக நாடா­ளு­மன்­றத்­தில் உள்­ள­வர்­களே இதற்குக் கார­ணம். அவர்­களே இந்த நாட்­டை நாச­மாக்­கி­யுள்­ள­னர். இரண்டு லட்­சத்­துக்­கும் அதி­க­மான மக்­கள் வேலை வாய்ப்­பில்­லாது போகும் நிலமை ஏற்­பட்டு வரு­கின்­றது.
அரசு தெளி­வான பொரு­ளா­தார கொள்­கை­யைக் கூற­வேண்­டும். விலைக் குறைப்­புக்­க­ளைச் செய்ய வேண்­டும். தேசிய உற்­பத்­தி­களை அதி­க­ரிக்கவேண்­டும். உள்­நாட்டு முத­லீ­டு­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்கவேண்­டும். இல்­லை­யேல் நாட்­டில் மக்­கள் புரட்சி வெடிப்­பதை தடுக்க முடி­யாது -– என்­றார்.

Previous Post

வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் சிக்கின சிறப்பு அதிரடிப்படையிடம்

Next Post

அருணாச்சல்லில் லேசான நிலநடுக்கம்

Next Post

அருணாச்சல்லில் லேசான நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures