கடந்த ஆட்சிக்காலத்தில் சயிற்றம் நிறுவனம் இயங்கியது.
ஆனால் அப்போது ஆட்சேபனைகள் தலைதூக்கவில்லை. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கின என்று உயர் கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அமைச்சர் நேற்று உரையாற்றிய போது .ஆர்ப்பாட்டங்னளினால் பல்கலைக்கழக கல்வி முடங்கியது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ,
இன்று சமர்ப்பிக்கப்படும் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 2017 மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சயிற்றம் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுடன் தொடர்புடையதாகும் என்றும் குறிப்பிட்டார்.
சயிற்றத்தின் சமகால மாணவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டவுடன் அந்நிறுவனம் கலைக்கப்படும். இலங்கையின் உயர்கல்வி நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கான பிரேரணை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வெளிநாடுகளில் உயர்கல்வி நிறுவனங்களை மேற்பார்வை செய்து அவற்றின் தரத்தை பேண முறையான பொறிமுறைகள் உள்ளன. இலங்கையில் அத்தகைய பொறிமுறை ஏதும் இருக்கவில்லை. இதன் காரணமாக கடந்த காலத்தில் பல பிரச்சினைகள் தோன்றிள.அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்தவர்கள் மாத்திரமே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்தவர்கள் மாத்திரமே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவார்கள். பல்கலைக்கழக கல்விமான் குழுவொன்று தகைமைகளை மதிப்பிடும். இந்த மாணவர்கள் கொத்தலாவல பல்கலைக்கழத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சயி;ற்றம் நிறுவனம் கலைக்கப்படுமென அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்: நளின் டி ஜயதிஸ்ஸ :
சயிற்றம் மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பாராளுமன் உறுப்பினர் ரமேஷ் பத்திரன:
நீண்டகால நெருக்கடிக்கு சாதகமான தீர்வை தர முடிந்தமைக்கு உயர்கல்வி அமைச்சருக்கு நன்றி .
பிரதியமைச்சர் நளின் பண்டார:
ஒரு சில அரசியல்வாதிகள் சயிற்றம் விவகாரத்தை சுயலாபம் கருதி அரசியல் மயமாக்குகிறார்கள் .

