Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சயனைட் நாவல் விமர்சனம் – சிவரஞ்சனி

January 31, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சயனைட் நாவல் விமர்சனம் – சிவரஞ்சனி

நூல் : சயனைட்
ஆசிரியர் : தீபச்செல்வன்

நிகழ்காலமும் போர்க்களமும் – நிகழ்காலமும் போர்க்களமும் தொடர்ந்தோடி வந்து கடைசியில் நிகழ்காலமே போர்க்களம் தான் என்று முடிகிறது சயனைட் நாவல்.

ஈழத்தின் கதைகளையோ இயக்கத்தின் அதிர்வுகளையோ இலகுவாய் வாசித்துவிட முடிவதில்லை. அது எங்களின் வாழ்வியல் என்பதால் பெரிதாய் வலிக்கும். இறுக்கங்களை தாங்குகின்ற இதயம் இல்லையென்பதால் ஈழம் சார்ந்த புத்தகங்கள் சிலவற்றை வாசிக்கப்படாத வலிகளாக அடுக்கி மட்டுமே வைத்திருக்கிறேன். அப்படியே படித்து பதிவிட்டாலும் என்ன நடக்கும் என் முகநூல் பக்கத்தின் மூச்சை நிறுத்தி விடுகிறார்கள் பலவீனமானவர்கள்.

அடுக்கிய புத்தகங்கள் மட்டும் அல்ல எல்லா புத்தகங்களையும் விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டேன். வாசிப்பற்ற பூமியில் வசிப்பது மூச்சுவிட முடியாத சிரமத்தை தரும்போதுதான் தீபச்செல்வனின் ‘சயனைட்’ நூல் வெளியீடு. இந்த வருட வாசிப்பின் தொடக்கம் இங்கிருந்து தொடங்கியது எனக்கு. நான் வாங்கிய முதல் புத்தகம் – வாசித்து முடித்த முதல் புத்தகம் – தீபச்செல்வனின் எழுத்தில் நான் வாசிக்கின்ற முதல் புத்தகம்.

‘சயனைட்’ உயிர்க்கொல்லி அல்ல. கனவுகள் நிரம்பி கட்டமைக்கப்பட்ட ஒரு விடுதலை தாகத்தை வீழ்ந்துவிடாமல் இறுத்திக்கொள்ள அல்லாடுகிற ஓர் உயிர்.

வளவன் வரிச் சீருடைக்குள் தன்னைப் புதைத்துக்கொண்ட பெருவீரன். பருதி தீயில் எரிந்தாலும் தன்னை தேடவைத்துக் கொண்டேயிருக்கிற வீரன். குயிலன் – சீராளன் – வரதன் என்று இவர்கள் களமாடிய வீரத்தின் நீட்சிகள் அதிர்வுகள் நிரம்பியவை.

தாயக பூமியின் விடுதலைக்காக தன்னையே ஈந்து களமாடிய வீரர்களைத்தான் நிகழ்கால சமூகம் இப்படி நிராகரிக்கிறது. அவர்களுக்கு போர்க்கள பூமிகூட பஞ்சுமெத்தையாக இருந்திருக்கும் நிகழ்காலம் தான் முள்படுக்கையாக மாறிக் கிடக்கிறது. அவர்கள் பெரிதாய் என்ன கேட்டார்கள் சமத்துவம் சமூக நீதியைத் தானே.

வெற்றியை துரோகத்தால் கைப்பற்றிய மேலாதிக்கத்தின் பெருமை பீத்தல் நாகரிகங்கள் போராளிகளின் மிச்ச வாழ்வையேனும் விட்டுவைத்ததா என்றால் இல்லை என்பதன் சாட்சியே சயனைட்.

வதை முகாமிற்குள் வதைக்கப்பட்டார்கள் – சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டார்கள் – இருட்டறையில் அடையாளம் அற்றார்கள் – பச்சைமிளகாய் சாறில் அவர்களின் விழிமீன்கள் வெந்தன. போராளிகளை மீட்டுவிட்டோம் புனர்வாழ்வை அளித்துவிட்டோம் என்ற பொய்யில் எல்லாம் மெல்ல மெல்ல ஏறியிருக்கிறது சயனைட் ஊசி. பசிக்கு சோறு கொடுத்தார்கள் அப்படியே அதில் விஷத்தையும் தூவிக் கொடுத்தார்கள்.

மீட்கப்பட்ட போராளிகளின் எண்ணிக்கையில் எண்கள் மட்டுமே பத்திரமாக இருக்கிறது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

நாவலில் ஒரு காதல்…… வீரனையும் வீழ்த்திவிடுகிற கூர்மையான கத்தி. கடைசிவரை அவளின் நேசத்தைக் கைவிடாத வளவன் வீரனாக மட்டுமல்ல காதலாகவும் இதயத்தில் நிற்கிறார். வேழினி பேசப்படும் பெருமையை இழந்துவிட்ட துரோகத்தின் நீட்சி.

மகன்களைத் தேடி அலைகிற எத்தனையோ அம்மாக்களின் குரல்கள் இன்னும் ஓய்ந்துவிடாமல் அழுதழுது தேடிக்கொண்டேதான் இருக்கிறது தொலைந்தவர்களையெல்லாம் ஈழத்தில் தினம் தினம். அதைக் கண்டும் காணாமல் கடந்துகொண்டேதான் இருக்கிறது அதிகார வர்க்கம். நாட்டை உயிரில் சுமந்த வீரர்கள் இன்று வாழ்வாதார வழியற்று குடும்பங்களும் கைவிட்ட நிலையில் மனநோயாளியாக்கப் படுகிற அவலம் என்பது கொடூரத்தின் உச்சம்.

தேநீரிலும் பழச்சாறிலும் ஏறி இறங்கிக்கொண்டுதான் இருக்கிறது சமத்துவம் இன்னமும் சமம் ஆகாமல்.

வரலாறுகள் பெரும்பாலும் உண்மையை வெளிக்கொணரவே போராடும். எங்களின் கதையில் எல்லாமே மாறிக் கிடக்கிறது. திறந்து கிடக்கும் உண்மைக்கு நீதியற்று அலைகிறோம்.

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் தானே மெளனிப்பதாய் அறிவிப்பு செய்தார்கள். அதனால் அவர்களின் உதிரத்தையெல்லாம் எழுதுகோலில் நிரப்புவோம். கடைசி சொட்டு முடியும்போதேனும் நிச்சயம் எங்கள் கையிலிருக்கும் தமிழீழம்.

நல்லவேலை எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வரிச் சீருடைகள் வந்துதான் பள்ளிச் சீருடை மாட்டியிருக்கிறார்கள். இல்லையென்றால் அவரும் சாதாரண ஆண்களைப்போல இருந்திருக்கலாம். விடுதலை தாகம் இவ்வளவு கனமாய் இல்லாமல் கரைந்து போயிருக்கலாம் பிழைத்துக்கொண்டார் அதனால் எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

நிராகரிப்பின் வலியும் வீரத்தின் நீட்சியும் ஒன்றன் பின் ஒன்றாகி ஒன்றி முடிந்து முடியாமல் தொடர்கிற விடுதலை தாகமே “சயனைட்”

மண்ணை நேசிக்கின்ற எல்லோரையும் விழுங்கிக் கொள்ளும் இப்புத்தகம்..

-சிவரஞ்சனி

Previous Post

மது போதையில் குளத்தில் குதித்த குடும்பஸ்தர்

Next Post

நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவையின் நினைவுகள் ஆசீர்வாதமாக அமையட்டும் – பிரதமர் 

Next Post
நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவையின் நினைவுகள் ஆசீர்வாதமாக அமையட்டும் – பிரதமர் 

நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவையின் நினைவுகள் ஆசீர்வாதமாக அமையட்டும் - பிரதமர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures