கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2016ம் வருடம் ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை பரிசீலித்த நீதிபதி அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை நீதிமன்ற வளாகத்தில் சம்பிக்க ரணவக்கவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் குழுமியிருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

