சட்ட ரீதியான அரசாங்கம் ஒன்றின் கீழ் நடைபெறும் தேர்தல் ஒன்றை முடியுமானால் நடாத்திக் காட்டுங்கள் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார்.
கண்டியில் இன்று (24) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
பிரதமர் பதவியை பறித்தெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால, சபாநாயகர் பதவியையும் பறிப்பதற்கு முயற்சி எடுத்தார். பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு சுதந்திரமாக வாக்கெடுப்பொன்றை நடாத்த வாய்ப்பளிக்காத மைத்திரிபால சிறிசேன, பொது மக்களுக்கு சுதந்திரமான தேர்தல் ஒன்றை வழங்குவாரா? எனவும் சம்பிக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.