98 பாதுகாப்பு காவலரண்களை சம்பந்தன் அகற்றினார். முஸ்லிம் தலைமைகள் ஒன்றையாவது அகற்றினார்களா என ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கேள்வியெழுப்பினார்.
கிண்ணியாவில் இன்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“ஒரு அரசியல் தலைமைத்துவம் ஊரின் பொருளாதார, கல்வி மற்றும் கலாசார விடயங்களை சற்று சிந்திக்க வேண்டும், முஸ்லிம் தலைமைத்துவம் தற்போது எதனை நோக்கிச் செல்கின்றார்கள்.
இந்த சமூகத்தை பாதுகாத்து கல்வியில் முன்னேறிச் செல்ல வேண்டும், அதற்கு தலைமைத்துவம் உதவ வேண்டும்.
உயர்ந்த தொழில்நுட்ப துறைகளை ஏற்படுத்த வேண்டியதோடு, அதற்காக தான் 1400 கோடி ரூபா செலவில் கல்வித் துறையை மேம்படுத்த தான் நான் அந்த பல்கலைக்கழகத்தை கட்டியிருக்கின்றேன்.
அதனை யாரும் எடுக்கவும் பறிக்கவும் முடியாது. ஜனாதிபதி அதனை ஒப்படையுமாறும் கேட்டார். அதற்காக பணத்தினை தருகின்றேன் என்றார்.
நான் சொன்னேன் அது என்னுடைய சொத்து அல்ல, அது முஸ்லிம் சமூகத்தின் சொத்து என்றேன்.
ஜனாதிபதி தேர்தல் வந்தவுடன் முஸ்லிம் தலைமைகள் நான் கோத்தபாயவின் முகவர் என்று கூறி எனக்கெதிராக பொய்களை கூறித் திரிகின்றார்கள்.
இவர்கள் ஒன்றை விளங்க வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்காக நான் பல சேவைகளையும் பொறுப்புகளையும் செய்திருக்கின்றேன்.
ஆனால் பேரினவாதிகளின் பின்னால் இவர்கள் இருக்கின்றார்களே பதவிக்கும், தனது சொந்த சுயலாபத்திற்குமே என்றால் அது மிகையாகாது.
2008ம் ஆண்டு முதலாவது கிழக்கு மாகாண சபையில் ஹக்கீம் துரோகத் தனமான செயல்பாட்டினை மேற்கொண்டார். காரணம் முஸ்லிம் முதல் அமைச்சரை ஏற்படுத்துவோம் என்றேன்.
ஆனால் அவர் என்னுடைய கதைகளை கேட்காமல் துரோகத் தனமான வேளைகளில் ஈடுபட்டார். அதன் பின் தான் றிசாட் பதியுத்தினுடைய தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஏற்படுத்தினார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கே நடைபெறுவது தலை கிழாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நான் வெற்றி பெறுவேன் என்பது நிச்சயம் இல்லை. எனக்கு நூறு வாக்குகள் கிடைத்தாலும் சரிதான், பத்தாயிரம் வாக்குகள் கிடைத்தாலும் நான் தோல்வி தான்.
நான் போட்டியிடுவது ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கு தான் நான். நான் இந்த முஸ்லிம் சமூகத்தின் இரண்டரை இலட்சம் வாக்குகளை எதிர்பார்கின்றேன்.
அந்த வாக்குகளை எதிர்பார்த்தே நான் போட்டியிடுகின்றேன். எனது “நாளைய கனவு” என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுகின்றேன்.
இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை ஓரளவேனும் நிவர்த்திக்கப்படும்” என கூறிளார்.

