உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ள நிலையில் இலங்கையில் 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலையை நுகர்வோர் அதிகார சபை 245 ரூபாவினால் அண்மையில் அதிகரித்தது.
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டொன் சமையல் எரிவாயுவின் விலை 590 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இது தற்பொழுது 470 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.