லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை சூத்திரத்திற்கமைய மாதாந்தம் 5 ஆம் திகதி சமையல் எரிவாயு விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 200 – 300 ரூபாவினால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினாலும் , 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும் , 2.3 கிலோ கிராம் சிரிண்டரின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.