நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க சமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்த பல வர்த்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை 1977 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

