அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சம்பளத்தை வாங்கிவிட்டு ஒழுங்காக வேலை செய்வது இல்லை என்கின்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
எனினும் அவர்களில் ஒரு சிலர் தமது கடமைகளை சரியாக செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
கடமை உணர்ச்சியுடன் தன் நலம் கருதாது அர்ப்பபணிப்புடன் சேவை செய்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
அந்தவகையில் தமிழர் பகுதியில் போக்குவரத்து பொலிசாராக கடையாற்றும் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமது பணியினை அவர் மழையில் நனைந்தபடி செய்தமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் குறித்த அதிகாரிக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் கூறி வருகின்றனர்.

