Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்ளும் கிராம சேவகர்

September 13, 2020
in News, Politics, World
0

சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்ளும் கிராம சேவகர் ஒருவருக்கு
பிரதேச செயலக அதிகாரி துணைபோவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . வவுனியா மருதமடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமை புரியும் R. சுயந்தன் என்பவர் சமூக வலைதளங்களில் பெண்களிடம் நாகரிமகற்று நடந்து கொள்வது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதோடு குறித்த பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட போதும் அதனை கவனத்தில் கொள்ளாது வவுனியா பிரதேச செயலர் ந .கமலதாசன் கவயீனமாக இருப்பது தெரியவந்துள்ளது .குறித்த நபர் மிகவும் ஆபாசமான முறையில் சில பெண்ணிய செயற்பாட்டாளர்களை விமர்சித்து வருவதோடு தனக்கு பிரதேச செயலர் எப்போதும் சார்பாகவே நடந்துகொள்வதாக திமிர்த்தனமாக செயற்பட்டு வருகின்றார் .
இவரத்தொடர்பில் உரிய பெண்ணிய செயற்பாட்டாளர் பிரதேச செயலருக்கு அனுப்பிய கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது .

பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
வவுனியா.

வணக்கம்,

கிராம உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடு.

வவுனியா பிரதேச செயலக பிரிவுட்குட்பட்ட மருதமடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமை புரியும் R. சுயந்தன் என்பவர் சமூக வலைதளங்களில் பெண்களிடம் நாகரிமகற்று நடந்து கொள்வதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகிறேன்.

தனது முகநூல் சுயவிபரத்தில் தான் வவுனியா பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோத்தராக பணி புரிவதாக பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
(இணைப்பு 1)

அரச உத்தியோகத்தரான ஒருவர் பொதுவெளிகளில் நாகரிகமாக உரையாடுவதும் மானுட விழுமியங்களைப் பேணுவதும் கடமையாகும். அதுவும் கிராம உத்தியோகத்தர் என்பவர் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுட்குட்பட்ட பொது மக்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் பொறுப்புடையவராவார்.
திரு. ஆர். சுயந்தன் என்கிற நபர் பொதுவெளியில் அவரோடு சம்மந்தமற்ற , பொதுப்பிரச்சனை ஒன்றிற்காக பேசிய என்னை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார்.
(இணைப்பு 2)

தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய பெரியார் (ஈ.வே.ராமசாமி) எனும் மாமனிதரின் சாதிய ஒழிப்பு , பெண் விடுதலை போன்றவற்றை நான் எப்போதும் சமூக வலைதளங்களில் பிரசாரப்படுத்தி எழுதுவேன். அதற்காக பெரியார் இப்போது இருந்திருந்தால் , இவள் பெரியாரைய்ம் வைத்துக்கொண்டிருப்பாள் என்று கேடுகெட்ட அநாகரிகமான விமர்சனத்தை அவர் முன்வைத்திருப்பதை நீங்கள் மேலேயுள்ள இணைப்பில் கண்டிருப்பீர்கள்.

நமது வாழ்நாளில் பல்வேறு மாமனிதர்களின் கொள்கைகளை பின்பற்றும் நாம் அவர்களை வாழ்வியல் வழிகாட்டியாக கொண்டிருக்கிறோம். ஏன் வடக்கில் பல பெண்கள் பிரபாகரன் அவர்களை தன் தலைவராக வரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் நீ அவரை வைத்துக்கொண்டிருப்பாய் என எந்தப் பெண்ணையாவது சொல்வது எவ்வளவு அநாகரிகமானது. அதே போல பெரியாரைப் பின்பற்றும் பெண்களை பெரியார் உயிரோடு இருந்தால் பெரியாரை வைத்துக் கொண்டிருப்ப்பாள் என்று கிராம உத்தியோகத்தரான ஒருவர் பேசுவது மானுட நாகரித்திற்குட்பட்டதா?

இந்த பண்பாடானது பெண்களைப் பற்றிய அவரது கீழ்த்தரமான பார்வையில் இருந்தே வருகிறது. பெண்கள் அரசியலிலோ , பொதுவெளியிலோ பேசும் போது அவரை பாலியல் ரீதியாக அவதூறு கூறுவது அவரது ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துகிறது. இவரின் ஒட்டு மொத்த பெண்கள் பற்றிய கேவலமான மதிப்பீடே இதுவாகும். இவர்களைப் போன்ற கேவலமானவர்கள் தான் ஒரு சான்றிதழில் கையொப்பமிட பாலியல் லஞ்சம் கோரும் கேடுகெட்ட காரியங்களைச் செய்யத் துணிபவர்கள். ஏனெனில் எந்த பெண்ணும் எந்த ஆணுடனும் பாலியல் தொடர்பை வைத்துக்கொள்வாள் என்கிற கேடுகெட்ட சிந்தனையின் வெளிப்பாடுகளே பொதுவெளியில் இவ்வாறான வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

ஓர் அரச உத்தியோகத்தர் , அதுவும் பொதுமக்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் பொறுப்பிலுள்ள உத்தியோகத்தர் இவ்வாறு பொதுவெளிகளில் அநாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகிப்பது தாபன விதிக் கோவையின் படி ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதா?
இவர்களின் நன்னடத்தைக்கு பிரதேச செயலாளரான தாங்களே பொறுப்பு என்பதால் இவரைப் பற்றிய குற்றச் சாட்டை உங்களிடம் கொண்டு வருகிறேன்.

என்னை மட்டுமல்ல , தனது கிராம உத்தியோகத்தர் பிரிவிட்குட்பட்ட மற்றைய பெண்களையும இவர் இவ்வாறு கேவலமாக கதைக்கமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஏனெனில் பொது வெளியில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது இவ்வாறு கதைக்கும் ஒருவர் , தனியாக தன்னிடம் வரும் பெண்களிடம் எவ்வாறு உரையாடுவார்?

ஆணுக்கு பெண் சரிநிகரென்ற விழுமியம் கொண்ட சமதர்ம சமூகத்தை படைக்க அரச உத்தியோகத்தர்கள் பங்களிக்க வேண்டும் என்பதும் பெண்களை கண்ணியப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அரச உத்தியோகத்தர்களின் கடமை என்கிற வகையில் இவர் அரச உத்தியோகத்திற்கு தகுதியானவரா? என்பதை உஙகள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

என்னைக் காண்பதற்கு ஆவலாக இருப்பதாக கூறியிருப்பதால் உங்கள் முன்னிலையில் இவரைச் சந்தித்து பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்திருக்கிறேன். இவர் அரச சேவைக்கு அதுவும் , கிராம உத்தியோகத்தர் போன்ற பொதுமக்களிடம் பொறுப்பு கூற வேண்டிய பதவிற்கு சிறிதும் தகுதியற்றவர் என்பதை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

இதற்கான ஒழுக்காற்று நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.

இப்படிக்கு,
உண்மையுள்ள,

(S.M.தர்ஷினி)

பிரதிகள்.
1. மாவட்ட செயலாளர் , மாவட்ட செயலகம், வவுனியா

2. செயலாளர் , பாதுகாப்பு அமைச்சகம், வித்யா மாவத்த, கொழும்பு 7.

5_n 07_n 90_n g4_n jgu vby

Previous Post

மீரா மிதுன் மரணமா? – டுவிட்டர் பதிவு

Next Post

தந்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதில் மகன் பலி!

Next Post

தந்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதில் மகன் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures