சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இனவாத நடவடிக்கைகளைத் தூண்டும் விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாகோலயில் அமைந்துள்ள இளைஞர் தடுப்பு மத்திய நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.