கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுவதற்காக கல்முனைக்குடி 02 04ம் பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரலிட்டுள்ளார்.
கல்முனைக்குடி 02, 04ம் பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்தபோது கடந்த வெள்ளிக்கிழமை (10) சிலரால் தாக்கப்பட்டு சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய 30, 45 வயது மதிக்கத்தக்க இருவர் பாழடைந்த மண்டபம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் திங்கட்கிழமை(13) மதியம் பொலிஸார் கைது செய்யப்பட்டு நேற்று (14) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதனையடுத்து குறித்த இருவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

