Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சமஸ்டி ஆட்சி முறையில் மாத்திரம்தான் நடைமுறைப்படுத்தமுடியும் | கஜேந்திரகுமார் மோடியிடம் தெரிவிப்பு

April 6, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் மோடி வலியுறுத்தல்

ஒற்றையாட்சிக்குள் எந்த விதத்திலும் தீர்வை காணமுடியாது  சமஸ்டி ஆட்சி முறையில் மாத்திரம்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி தீர்வுக்குரிய அம்சங்களை முழுமையாக அனுபவிக்ககூடிய நிலைமை உருவாகும்  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.

 தமிழ் கட்சிகளைபுதுடில்லிக்கு வரச்சொல்லி இந்த தீர்வை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறாமல் அதேநேரம் ஒற்றையாட்சி முறையை தாண்டி ஒரு சமஸ்டி ஆட்சிமுறையை முழுமையாக அடையக்கூடியபொதுநிலைப்பாட்டொன்றை இந்தியாவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அடைவதற்கு உதவுமாறு நாங்கள் மோடியிடம்கேட்டுக்கொண்டோம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி முக்கியமாக நான்கு விடயங்களை இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தது.

முதலாவது நாங்கள் குறிப்பிட்ட விடயம்  தமிழ்தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரை இந்தியாவிற்கு மாத்திரம்தான்இலங்கை தீவை பொறுத்தவரை  இந்தியாவிற்கு மாத்திரம்தான் தேசிய பாதுகாப்பை நோக்கிய பார்வை உள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

வேறு எந்த நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இலங்கையை அணுகுவதற்கான நியாயங்கள் கிடையாது அந்த வகையிலே இந்தியாவிற்கு இலங்கை ஒரு தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயம்  என்ற அடிப்படையிலே மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவிற்கு இலங்கை முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதிலும் நாங்கள் தெளிவாக உள்ளோம்.

விசேடமாக வடக்குகிழக்கில் இந்தியாவிற்கு அந்த உரிமை உள்ளது என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

இரண்டாவது விடயம்இந்திய இலங்கை ஒப்பந்தம் – 

இலங்கை அரசு தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மிகவும் கிட்டக்கொண்டுவந்த ஒரு சட்டரீதியான ஆவணம்  இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வு என குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் 13வது திருத்தத்தை ஒற்iயாட்சி முறைக்குள் கொண்டுபோய் முடக்கினதால்இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பல வருடங்கள் கழிந்தும் இந்தியாவே இன்றைக்கு கூட அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி முறையிலே மத்திய அரசாங்கத்திற்குதான் அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றது.எல்லாவிடயங்களிலும் மத்திய அரசின் கையோங்கும் அதனுடைய சாராம்சம்- நடைமுறை அதிகாரங்கள் பகிரமுடியாது ஒற்றையாட்சிக்குள் பகிரமுடியாது என்ற விடயம் எங்களுடைய மூன்று தசாப்தங்களிற்கு மேலாக 38 வருடங்களிற்கு மேலாக நாங்கள் கண்ட அனுபவம்

.ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூடஅதனை ஓற்றையாட்சிக்குள் கொண்டுபோய்13வது திருத்தத்தை  முடக்கியதால்இன்றைக்கு கூட தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலை காணப்படுகின்றது.

மோடி பிரதமரான பின்னர் இலங்கைக்கு மேற்கொண்ட முதலாவது விஜயத்திலே நாடாளுமன்றத்திலே ஆற்றிய உரையில் அவர் ஒரு முக்கியமான விடயத்தை வெளியிட்டிருந்தார் தனக்கு மிகவும் உகந்த ஆட்சிமுறையாக  கூட்டுறவு கூட்டாட்சி cooperative federalism என்ற விடயத்தை வலியுறுத்தியிருந்தார் அதனை சுட்டிக்காட்டி நாங்கள் வலியுறுத்தியிருந்தோம்.நாங்கள் அந்த நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்கின்றோம் ஒற்றையாட்சிக்குள் எந்த விதத்திலும் தீர்வை காணமுடியாது  சமஸ்டி ஆட்சி முறையில் மாத்திரம்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி தீர்வுக்குரிய அம்சங்களை முழுமையாக அனுபவிக்ககூடிய நிலைமை உருவாகும்.

இதனை அடைவதற்கு நாங்கள் இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் கேட்டுக்கொண்டோம்

 தமிழ் கட்சிகளைபுதுடில்லிக்கு வரச்சொல்லி இந்த தீர்வை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறாமல் அதேநேரம் ஒற்றையாட்சி முறையை தாண்டி ஒரு சமஸ்டி ஆட்சிமுறையை முழுமையாக அடையக்கூடிய இபொதுநிலைப்பாட்டொன்றை இந்தியாவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அடைவதற்கு உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டது இரண்டாவது விடயம்.

மூன்றாவது விடயம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை கருதி தமிழர் தாயகப்பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதில் இந்தியாவிற்கு முன்னுரிமையை வழங்கவேண்டும் என்பதுடன் மாத்திரமல்லாமல்இமற்ற தரப்புகள் இந்தியாவிற்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையிலே நுழைவதை பல்வேறு காரணங்களை முன்வைத்து நாங்கள் அதனை எதிர்த்துவந்திருக்கின்றோம்.

தமிழர் தாயகம் என்பது இந்தியாவிற்கு பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதை நாங்கள் முழுமையாக உள்வாங்கியுள்ளோம்.

இந்தியாதான் கூடுதலான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் நாங்கள் விரும்புகின்றோம் ஆனால் அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றபோது இந்தியாவிற்கு பாரிய பொறுப்புள்ளது ஏனென்றால்இஈழத்தமிழர்களின் அனுபவங்கள் என்பது அபிவிருத்தி என்ற பெயரில் கடந்தகாலங்களில் 76 வருடங்களிற்கு மேலாக நடைபெற்ற வேலைத்திட்டங்களை 

வைத்துதான்ஸ்ரீலங்கா அரசு வடக்குகிழக்கை தமிழ்பேசும் மக்களின் பெரும்பான்மை விகிதாச்சாரத்தைஇமாற்றங்களை கொண்டுவந்துள்ளது ஆகவேஇப்பிடி பட்ட வேலைத்திட்டங்கள் இந்தியாவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற போதுசனத்தொகையின் விகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கான எந்த ஒரு இடமும் வழங்கப்படக்கூடாது.இந்தியா கவனத்தில் எடுக்கவேண்டும் அப்படியாகயிருந்தால்எங்களுடைய முழு பூரண ஆதரவும் அந்த வேலைத்திட்டங்களிற்கு இருக்கும் என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.

நான்காவதாக வடக்கிலே இருக்கின்ற மீனவர்களின் பிரச்சினையை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.

வடக்கிலே இருக்ககூடிய தமிழ் கடல்தொழிலாளர்கள் இன்று வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்இமீனவர் பிரச்சினை தீர்க்கப்பட்டேயாகவேண்டும்இ தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது.

போர்காலத்திலே மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களாக கடல்தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.அவர்களிற்கு தொழில் செய்வதற்கு கூட தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அப்படிப்பட்ட நிலையிலிருந்து இப்போதுதான் தலைதூக்குவதற்கு வெளிக்கிட்டுள்ள நிலையிலேஒவ்வொரு நாளும் இந்திய மீனவர்களின் வருகையினாலே ஈழத்தமிழ் கடற்பரப்பிலே அவர்கள் தொழில் செய்வதாலேயும்எங்கள் மீனவர்கள் பாரிய சொத்து இழப்பை சந்திக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் இழப்பை சந்திக்கின்றார்கள்.அந்த இழப்புகளிற்கான நஸ்ட ஈடாக அரசாங்கம் ஒரு சதம் கூட கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இது வெறுமனே மீனவர்களின் பிரச்சினையில்லைஇ ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களினது இருப்பு சார்ந்த பிரச்சினையாக காணப்படுகின்றது. ஏனென்றால் எங்களுடைய பொருளாதாரத்திலே கடற்தொழில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கின்றதுஇந்த பிரச்சினை தீர்க்கப்பட்டே ஆகவேண்டும் தொடர அனுமதிக்க முடியாது.

இந்;த பிரச்சினையை அணுகுவதற்கு எங்களுடைய கடல்தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் இந்தியாவிற்கு வந்துதமிழ் நாட்டிற்கு சென்று அங்கு இருக்ககூடிய எங்கள் உறவுகளை சந்தித்துபிரச்சினைகளை விளங்கப்படுத்திஎங்கள் கடற்பரப்பிலே அத்துமீறி தொழில்செய்வதை நிறுத்துவதற்கு இந்தியா உதவுமாக இருந்தால் நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க தயார் ஆனால் இது நிறுத்தப்படவேண்டும்.

Previous Post

அநுராதபுரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 

Next Post

வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர்

Next Post
வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர்

வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures