நாட்டிற்கு எதிராக செயற்படும் ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துள்ளமை முப்படையினரை அவமானப்படுத்தும் செயல் என ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
எலிய அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் தெரிவித்தமை, ஜெனீவா அமர்வில் இந்த முறை எமக்கு காணப்படும் மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.