Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் : கைதான மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

May 6, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பல்கலை மாணவனின் திடீர் மரணம்: கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நான்கு மாணவர்களும் நேற்று (04.05.2025) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு இன்று (05.05.2025) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படடடுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மஹரகம, எம்பிலிப்பிட்டிய, வாரியபொல மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

பல்கலை பகிடிவதை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான சரித் தில்ஷான் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். 

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் : கைதான மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Sabaragamuwa University Students Remanded

மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம்சாட்டினர்.

இத்தகைய சூழலில், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்கல்வி அமைச்சு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்தவால் மூன்று பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது. 

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் : கைதான மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Sabaragamuwa University Students Remanded

இந்தப் பின்னணியில், சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும் 20 மாணவர்களிடமிருந்து சமனலவெவ காவல்துறையினர் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

பின்னர், பகிடிவதை சம்பவம் தொடர்பான விசாரணை, பதில் காவல்துறைமா அதிபரின் உத்தரவின்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

நீதிமன்ற உத்தரவு

அந்த விசாரணைக்கமைய சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவர்கள் நான்கு பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று இரவு கைது செய்தது.

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் : கைதான மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Sabaragamuwa University Students Remanded

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பலாங்கொடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான சரித் தில்ஷான் உயிரிழந்தமை தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Next Post

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; நாடளாவிய ரீதியில் 50 சத வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவு

Next Post
18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; நாடளாவிய ரீதியில் 50 சத வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures