மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான வரைவைக் கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் புதிய சபை முதல்வராக தினேஸ் குணவர்த்தன நியமிக்கப்படுவதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தெரிவு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது சபை முதல்வராக தினேஸ் குணவர்த்தனவே செயற்படவுள்ளார்.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபை முதல்வராகச் செயற்பட்ட லக்ஸ்மன் கிரியெல்லவே கையளித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் மேற்படி மாற்றம் நடைபெற்றுள்ளது.

