நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை விட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,
எமது தரப்பிலேயே பெரும்பான்மை இருப்பதால் சபாநாயகருக்கு முகங்கொடுக்க முடியாத காரணத்தினால் இன்று நாடாளுமன்ற அமர்விற்கு வருகை தரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் ஒருவருக்கு பிரதமர் ஒருவரை நியமிக்கவோ அல்லது அகற்றவோ அதிகாரம் இல்லை என கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள ஆளும் கட்சிக்குக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் அது தொடர்பில் எதிர்க்கட்சியினர் எந்த தீர்மானத்தையும் முன்வைக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

