எரிவாயு கசிவு காரணமான வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து எந் நிறுவனத்தின் சிலிண்டர் பாதுகாப்பானது என்ற குழப்ப நிலைக்கு நுகர்வோர் தள்ளப்பட்டுள்ளார்கள்.
எரிவாயு கசிவுடனான வெடிப்பு சர்ச்சைக்கு மத்தியில் சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவுவதையும் அவதானிக்க முடிகிறது.
சமையல் எரிவாயு கசிவு காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் வெடிப்பு சம்பவங்கள் காரணத்தினால் நுகர்வோர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளார்கள்.
இரு பிரதான நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் நிலை காணப்படுவதால் சந்தையில் தற்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
லிட்ரோ நிறுவனம் இரண்டாவது முறையாக நாட்டுக்கு கொண்டு வந்த எரிவாயு தொகையிலும் குளறுபடிகள் காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாளை லாப் ரக நிறுவனம் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை முறையாக விநியோகிக்கும் என லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தின் தலைவர் கே.எச்.வேகபிடிய தெரிவித்தார்.
நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதகாலமாக சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், மரணங்களும் பதிவாகியுள்ளன.சமையல் எரிவாயு கலவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் காரமணாக சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தன பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.அதற்கமைய இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் அனுமதிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நிறுவனம் லிட்ரோ மற்றும் லாப் ரக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
தேசிய மட்டத்தில் விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களில் சமையல் எரிவாயு கசிவு உணர்திறனை தூண்டும் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 14 சதவீத அலகிற்கும் குறைவான மட்டத்தில் சேர்க்கப்படுகிறது.ஆகவே சந்தைக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடை நிறுத்துமாறு நுகர்வோர் அதிகார சபை கடந்த 3ஆம் திகதி இரண்டு பிரதான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியது.
எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த குழுவினரது அறிக்கையின் பரிந்துரைக்கமைய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இரண்டு பிரதான நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.சிவப்பு நிற முத்திரை பதிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பானது என குறிப்பிட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களில் இருந்து எரிவாயு கசிவு இடம்பெற்று அதனையண்மித்த வெடிப்பு சம்பவங்கள் நாட்டில் ஒரு சில பகுதிகளில் பதிவாகியுள்ளன.
லிட்ரோ நிறுவனம் கடந்த 11ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வந்த 3700 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவில் எதில் மெர்கெப்டன் இரசாயன பதார்த்தம் குறைந்தளவில் சேர்க்கப்பட்டுள்ள காரணத்தினால் அதனை தரையிறக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கவில்லை.
லிட்ரோ நிறுவனம் இவ்வாரம் நாட்டுக்கு கொண்டு வந்த எரிவாயு தொகையிலும் குளறுபடிகள் காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் தற்போது பாதுகாப்பான சமையல் எரிவாயு எது என்ற குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை நுகர்வோர் ஆரம்பத்தில் புறக்கணித்தனர்.சந்தைக்கும் தற்போது எரிவாயு சிலிண்டர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு வெடிப்புடனான சர்;ச்சைக்கு மத்தியில் சந்தையில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது.அத்துடன் ஒரு சில பகுதிகளில் உள்ள சமையல் எரிவாயு விநியோக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | easy24newskiruba@gm