நாட்டு மக்களுக்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் போது எதிர்த் தரப்பினர் அரசாங்கத்தைக் குறைகூறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றப்படவில்லையெனவும், அநீதியும், முறைகேடுகளும் சிம்மாசனம் ஏறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் போது இல்லாத பொல்லாததைக் கூறி, சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் எதிர்த் தரப்பினரைக் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டு மக்களின் அதிர்ஸ்டத்தின் காரணமாக, எதிர்த் தரப்பினருடைய சதிகள் எல்லாம் செல்லாக்காசாக மாறி வருகின்றன. மட்டுமல்லாது, எதிர்த் தரப்பினர் இன்னும் இன்னும் மக்களை விட்டும் தூர விலகிச் சென்று கொண்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சத்தியத்தை ஒருபோதும் மாற்ற முடியாது எனவும், அது மாறாது என்றும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார். நேற்று ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

