சட்ட விரோத போதைப்பொருள் மாத்திரை மற்றும் கருக்கலைப்பு மாத்திரை என்பவற்றுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட இருவர் இன்று (15) மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
4,000 எபல் போதைப்போருள் மாத்திரைகள் , 1,260 கருக்கலைப்பு மாத்திரைகள் (Contirakit), 50 மாவா எனும் போதைப்பொருள் அடங்கிய தகரங்கள் மற்றும் விற்றமின் D உள்ளடங்கிய சிறிய போத்தல்கள் 90 ஆகியவற்றுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப் பிரிவினால் நேற்று(14) குறித்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹெந்தளை, வத்தளை பகுதியைச் சேர்ந்த 62, 27 வயதுடைய இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்