Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சட்டவிராேதமான முறையில் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் தொடர்பில் பணியகத்துக்கு எந்தப் பொறுப்பும் இல்லை | மனுஷ

January 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்டவிராேதமான முறையில் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் தொடர்பில் பணியகத்துக்கு எந்தப் பொறுப்பும் இல்லை | மனுஷ

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாட்டு தொழில்களுக்கு செல்பவர்கள் தொடர்பில் பணியகத்துக்கு எந்த பொறுப்பும் இல்லை.

சட்டவிராேதமான முறையில் செல்பவர்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே நடவடிக்கை எடுக்கின்றது. அதனால் சட்டவிராேதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பும் மனித வியாபாரிகளிடம் அகப்பட்டுக்கொள்ள வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துவிட்டு தொழில்வாய்ப்புக்களுக்கு செல்வபர்களை பாதுகாப்பது, அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நலநோம்புகளை மேற்கொள்வது பணியத்தின் கடமையாகும்.

அதேநேரம் பதிவு செய்யாமல் தொழில் வாய்ப்புக்கு அல்லது வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களும் இருக்கின்றனர்.

இவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாடு என்றவகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். என்றாலும் இவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்வதை தடுப்பதற்கும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக அறிவுறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இவர்கள் அங்கு சென்று பிரச்சினைகளுக்கு சிக்கிக்கொண்டால், அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பது பாதுகாப்பு அமைச்சாகும். ஏனெனில் மனித வியாபாரத்துக்கு எதிரான நடவடிக்கை பிரிவு அமைக்கப்பட்டிருப்பது பாதுகாப்பு அமைச்சுக்கு கீழாகும்.

என்றாலும் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு செல்பவர்கள், அவர்கள் எந்த முறையில் சென்றாலும் அவர்கள் அங்கு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும்போது அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கே இருப்பதாக சிலர் பிழையாக நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு சட்டவிராேதமாக படகு மூலம் அல்லது வேறு வழிகளில் ஐராேப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு பிரச்சினைகளுக்கு ஆளானால் அதுதொடர்பில் பெரிதாக பேசப்படுவதில்லை. அவர்கள் அங்கிருந்தே வேறு தொழில்களுக்கு செல்கின்றனர். அல்லது அவர்களாகவே நாட்டுக்கு திருப்பி வருகின்றனர்.

ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இவ்வாறு சட்டவிராேதமான முறையில் செல்பவர்கள், அங்கு பிரச்சினைக்கு ஆளாகும்போது, அந்த நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் பாதுகாப்பு இல்லங்களுக்கு செல்வார்கள் அல்லது எமது தூதரங்களுக்கு சென்று முறையிடுவார்கள் அவ்வாறு இல்லாவிட்டால் வீதிகளில் இருந்து, தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துக்கொண்டு, தங்களின் பிரச்சினை தொடர்பாக பார்ப்பதற்கு யாரும் இல்லை என சமூக வலைத்தலங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் இவர்கள் எமது நாட்டில் பதிவு செய்துவிட்டு சென்றார்களா முறையாக வெளிநாட்டு தொழிலுக்கு சென்றவர்களா என தேடிப்பார்க்காமல், ஊடங்களும் அதனை பிரசுரிக்கின்றன. இதனால் அந்த நாடுகளுடன் இருக்கும் இராஜதந்திர உறவிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. அந்த நாடுகளின் நன்மதிப்புக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஊடகங்களும் இதுதொடர்பாக பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

என்றாலும் இவர்கள் மீது அனுதாப அடிப்படையில் இவர்களின் பிரச்சினை தொடர்பாக நாங்கள் தலையிட்டு அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இவர்களை நாட்டுக்கு அழைத்துவர வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் செலவழிக்க சட்ட ரீதியிலான எந்த அனுமதியும் எமக்கு இருக்கவில்லை.

அதனால் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்ககளை கருத்திற்கொண்டு இதுதொடர்பாக ஜனாதிபதியின் ஆலாேசனையின் பிரகாரம் அமைச்சரவைக்கு அறிவுறுத்தி விசேட அனுமதியொன்றை பெற்றுக்கொண்டுள்ளோம். என்றாலும் இவர்களை நாட்டுக்கு அழைத்துவந்து, விசாரணை மேற்கொண்டு, இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆரம்பித்திருக்கின்றோம்.

அத்துடன் இவ்வாறு சட்டவிராேதமான முறையில் நாட்டில் இருந்து வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அறிவுறுத்தும் பிரசார வேலைத்திட்ட ஒன்றை ஆம்பிக்க இருக்கின்றோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெற்றுக்காெண்டுள்ளோம். பிழையான வழிகளில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் மனித வியாபாரிகளின் பொய் வாக்குறுதிகளுக்கும் பாேலி பிரசாரங்களுக்கும் அகப்படவேண்டாம் என்றே நாங்கள் மக்களை அறிவுறுத்த இருக்கின்றோம்.

இதனால் தங்களின் வாழ்க்கையை அழித்துக்கொள்ள அகப்பட்டுக்கொள்ள வேண்டாம் என்றும், இதனால் தங்களின் குடும்பங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் அபாயம் இருக்கின்றது. அதனால் இவ்வாறான மனித வியாபாரிகளின் சதிவலைக்கு அகப்பட்டுக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Previous Post

எல்விஸ் பிரெஸ்லியின் மகளும் மைக்கல் ஜக்சனின் முதல் மனைவியுமான லிசா மேரி காலமானார்

Next Post

விமான பயணிகளுக்கு முகக்கவசம் அவசியம் | உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை

Next Post
விமான பயணிகளுக்கு முகக்கவசம் அவசியம் | உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை

விமான பயணிகளுக்கு முகக்கவசம் அவசியம் | உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures