வடக்கு மக்களுக்கு கருணை, இரக்கம், பரிவு என்பனவே தேவை. இதனைவிடுத்து சட் டத்தின் மூலமோ, அரசியல் திருத்தங்கள் மூலமோ அவர்களின் மனங்களை வென்றுவிட முடியாது. இதனை நாடு முழுவதும் தெளிவுபடுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
பெளர்ணமி தினத்தை முன்னிட்டு பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட தொகையினருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலக முன்றலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் உரை யாற்றுகையில் ஆளு நர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ் மக்களுடன் நான் இங்கே வாழ்ந்து வருகின்றேன். அவர்களின் கலாசாரம் மனித நேயம், மனிதத் தன்மை அவர்க ளின் துன்பங்கள் அனைத்தையும் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றேன்.போரில் இரண்டு தரப்புக்கள் சண்டையிட்டன. போர் நிறைவடைந்து சமாதா னம் ஏற்பட்ட பின்னர் கையில் இருக்க வேண்டியது துவக்கு அல்ல சமாதான ஒளி விழக்கு. அதனை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தப் பகுதியில் கட்டட ஒப்பந்தகாரர்கள் இடைநடுவில் விட்டுச் செல்லும் கட்டடங்களை உரிய காலப்பகுதியில் இராணுவத்தினர் கட்டி முடிக்கின்றனர். வீதிகளைச் சீரமைக்கின்றனர்.
எதிர்கால சந்ததியினருக்காக ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளனர். கட்டி முழுமைப்படுத்தப்படாமல் காணப்படும் வறிய மக்களின் வீடுகளை இராணுவத்தினர் கட்டிக் கொடுக்கின்றனர். குருதி கொடுக்கின்றனர். இவை போன்ற சேவைகளை இன்னமும் விரிவுபடச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்கின்றேன்.
போராலும் சுனாமியாலும் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு தென்னிலங்கையிலிருந்து வந்த பௌத்த துறவிகள் உதவி செய்கின்றமை மிகுந்த மனமகிழ்ச்சியை தருகின்றது. இந்த நல்ல செயற்பாடு தொடர வேண்டும் – என்றார்.
நிகழ்வில், போதிராஜா பதனமே தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஓமலே சோபிததேரர் அவர்களால் தாய்லாந்து, சிங்கபூர், மலேசிய நாட்டவர்களின் பங்களிப்புடன் முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சில்லு வண்டிகள் – 50, மாமரக் கன்றுகள் – 1,000, பசுக் கன்றுகள் – 100 மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த இராஜகுருவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலர் ஏ.எக்ஸ். செல்வநாயகம் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர் என்று ஆளுநரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

