சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீர் கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அத்துடன், அங்கு இளைஞர்களுக்கு கல்வி, தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக ஏசியன் லைட் இன்டர்நெஷனல் தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு துறைகளில் நடந்துவரும் ஜி-20 கூட்டங்களில் மே மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் இந்தியா விரைவில் சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை நடத்தவுள்ளது.
இக்கூட்டத்தை நடத்துவதன் மூலம் அந்த இடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து உலக சமூகத்துக்கு வலுவான செய்தியை இந்தியாவும் தெரிவிக்க விரும்புகிறது.
இப்போது 50 புதிய பட்டயக் கல்லூரிகள் அங்கு உள்ளன. மொத்தம் 25,000 இடங்கள் உள்ளன. ஏழு புதிய மருத்துவக் கல்லூரிகள் செயற்படுகின்றன. 5 புதிய தாதியர் கல்லூரிகள் மற்றும் ஒரு மாநில புற்றுநோய் நிறுவனம் யூனியன் பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளன. இவை உள்ளூர் சமூகங்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதாக ஏசியன் லைட் இன்டர்நெஷனல் மேலும் தெரிவித்துள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மை நிறுவனம் மற்றும் ஜம்மு, காஷ்மீர் ஆகியவை ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கியுள்ளன.
அரசு பட்டப்படிப்பு கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 96இல் இருந்து 147ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசத்தில் பெண்களுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாக ஆண்களை விட 10 – 20 சதவீதம் அதிக மானியம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.