சட்டம், ஒழுங்கு அமை ச்சுப் பதவியை முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியாலும், சிவில் அமைப்புகளாலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை மைத்திரிபால சிறிசேன அடியோடு நிராகரித்துள்ளார்.
அதனாலேயே நேற்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது மேற்படி பதவி ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தற்காலிக ஏற்பாடு என்றே கூறப்படுகின்றது.
பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் நேரடியாகவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
மகிந்த அணியும் போர்க்கொடி தூக்கியிருந்தது. அந்தப் பதவி வழங்கப்பட்டால் கடந்த ஆட்சியாளர்களைப் பழிவாங்கும் வகையில் அவர் செயற்படலாம் என்ற அச்சத்தாலேயே இவ்வாறு எதிர்ப்புகள் குவிந்தன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.