ஜிம்பாப்வே நாட்டில் கிராமம் ஒன்றில் உறவினரின் சடலத்தில் இருந்து உணவுக்காக உடல் உறுப்புகளை நீக்கியதாக இரண்டு பெண்கள் மீது புகார் எழுந்துள்ளது.
ஜிம்பாப்வே நாட்டின் Ndangara கிராமத்திலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
புதைப்பதற்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த உறவினரின் சடலத்தில் இருந்தே கண்கள், கன்னம் மற்றும் பால் உறுப்புகளை நீக்கியதாக தெரிய வந்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு பெண்களும் தற்போது பாரம்பரிய விசாரணை மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சடலத்தை புதைப்பதற்கு முன்னர் நடைபெறும் சடங்குகள் முடிந்த பின்னர் பாதுகாக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சமையலறையில் படுத்திருந்த உறவினர் பெண்கள் இருவர், விளக்குகளை அணைத்துவிட்டு சடலத்தில் இருந்து உறுப்புகளை நீக்கம் செய்துள்ளனர் என கிராமத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இரு பெண்களும் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.