பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (26) ஆஜரானதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சஜின் டி வாஸ் குணவர்தன 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன 2010 – 2012 ஆம் ஆண்டுகளுக்குட்பட்ட காலப்பகுதிகளில் அரசாங்கத்துக்கு 369 இலட்சம் ரூபா வருமான வரி செலுத்தவில்லை என கூறி, சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் சஜின் டி வாஸ் குணவர்தன இந்த வழக்கு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு எதிராக புதன்கிழமை (23) நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து சஜின் டி வாஸ் குணவர்தன கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (26) ஆஜராகியதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.