‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளை சனிக்கிழமை தொடக்கம் அவருக்கு ஆதரவான பரப்புரைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் முன்னெடுக்கவுள்ளது.
தொடர்ந்து 4 நாட்கள் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முதல் இரு நாட்களும் வடக்கிலும், அடுத்த இரு நாட்களும் கிழக்கிலும் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முதலாவது கூட்டம் வவுனியாவிலும் அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்று வடக்கில் இடம்பெறும். இந்தப் பரப்புரைக் கூட்டங்களில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.

