Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சஜித்துடன் இணைந்தார் மற்றுமொரு முன்னாள் இராணுவ தளபதி! படம் இணைப்பு

February 24, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலும் சஜித்தும் மூடிய அறைக்குள் தனியே நீண்ட நேரம் பேச்சு

முன்னாள் இராணுவ தளபதியும் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார்.

இலங்கை இராணுவத்தின் 54ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே (WWV RWP VSV USP ndc psc), இன்று (23) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து, ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை தெரிவித்து இணைந்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்ட இவர் ‘ஊழல் எதிர்ப்புக் கொள்கை மற்றும் அமுலாக்கல் பிரிவின் பிரதானியாகவும்’ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினது ஊழல் எதிர்ப்புப் பயணத்தின் ஆலோசகராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்  இன்றைய தினம் நியமிக்கப்பட்டார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தில் பாரிய பங்களிப்பைச் செய்த அவர், இராணுவத் தளபதியாக பணியாற்றுவதற்கு முன்னர் இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்புப் படையின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் தனது பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்த அவர், பாடசாலை நாட்களில் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். ரக்பி, கால்பந்து, தடகளம் மற்றும் கேடட்களில் சிறந்து விளங்கியதோடு ரக்பி, கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றுக்கான பாடசாலை வண்ணங்களையும் சுவீகரித்தார்.

பாடசாலை கற்றலுக்கு பிறகு, அவர் 1984ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையில் கேடட் அதிகாரியாக இணைந்த அவர், தியத்தலாவ இராணுவக் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்ற பின்னர், 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஆயுதப்படையில் இரண்டாம் லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டார். 

35 வருடகால அவரது புகழ்பெற்ற சேவை வாழ்க்கையில், அவர் கட்டளை, பணியாளர்கள் மற்றும் ஆலோசனை நியமனங்களையும் வகித்துள்ளார். 4ஆவது கவசப் படைப்பிரிவின் கட்டளை தளபதி, திருகோணமலை நகர கட்டளை அதிகாரி, 523 காலாட்படை படைத் தளபதி, கவசப் படையின் தளபதி, 55ஆவது காலாட்படை பிரிவின் துணைப் பொது அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இறுதி மனிதாபிமான நடவடிக்கையில், 52ஆவது காலாட்படை பிரிவு மற்றும் 64ஆவது காலாட்படை பிரிவுகளின் கட்டளை அதிகாரியாக பதவி வகித்தார். 

அவரது பதவிக்காலத்தில் இளம் அதிகாரிகள் கற்கை, இந்தியாவில் சிரேஷ்ட கட்டளைக் கற்கை, பாகிஸ்தானில் இடைநிலை தொழிற்கல்வி கற்கை, பங்களாதேஷில் பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் பதவி நிலை கற்கை, ஐக்கிய அமெரிக்க குடியரசின் ஆயுதப்படை அதிகாரிகள் உயர்நிலை கற்கை, இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி கற்கை என பல கற்கைகளை பூர்த்தி செய்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திரம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான டிப்ளோமா, இந்தியாவில் பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமா போன்ற கற்கைகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்து முதல் வகுப்பில் சித்தியடைந்தார்.

மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே இராணுவத்தில் அவர் ஆற்றிய சேவைகளுக்காக, வீர விக்ரம விபூஷண, ரண விக்ரம பதக்கம் உட்பட பல பதக்கங்கள், விருதுகளை பெற்றவர். 

இராணுவத்தில் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி, பூர்ண பூமி பதக்கம், வட கிழக்கு செயற்பாட்டு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50ஆவது ஆண்டு பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம், ரிவியரா பிரச்சார சேவை பதக்கம், 50ஆவது சுதந்திர ஆண்டு விழா பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம் உட்பட பல பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

Previous Post

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

Next Post

சிவனொளிபாத மலைக்கு பின்னால் சூரிய உதயம் 

Next Post
சிவனொளிபாத மலைக்கு பின்னால் சூரிய உதயம் 

சிவனொளிபாத மலைக்கு பின்னால் சூரிய உதயம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures