யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். வாக்கெண்ணும் நிலையமான யாழ். மத்திய கல்லூரியடியில் அதிகாலை பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டமைப்பின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
யாழ். வாக்கெண்ணும் நிலையத்தில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சி.சிறிதரன், சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பு வாக்கில் முதன்மையில் இருந்தார் என கருதப்படும் சசிகலா ரவிராஜ் 4ம் இடம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து சசிகலா வெளியேறியுள்ளார்.

