கொழும்பு நட்சத்திர ஹோட்டலான சங்கரிலாவில் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து சிதறியுள்ளனர். அவர்கள் 25 கிலோகிராம் நிறையுடைய சி4 வெடிமருந்துகளை தற்கொலை தாக்குதலிற்கு பயன்படுத்தியுள்ளனர்.
ஹோட்டலின் இரண்டு இடங்களில் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதலை நடத்தியிருந்தனர்.
சங்கரில்லா ஹோட்டலின் 616ஆம் இலக்க அறையில் ஏப்ரல் 20ம் திகதி அறையில் தங்கியவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அறையை வாடகைக்கு பெறும்போது, அவர்கள் தெமட்டகொட பிரதேசத்தின் முகவரியொன்றையே வழங்கியுள்ளனர்.
ஹோட்டலின் 3வது மாடியில் உணவகம், நடைபாதையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தொட்டகொட மாகவில்ல மேம்பாலத்திற்கு அண்மையாக உள்ள வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சுற்றிவளைப்பை நடத்தி சோதனை நடத்த முற்பட்டபோது, துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதுடன், தற்கொலை குண்டுதாரியொருவன் குண்டை வெடிக்க வைத்திருந்தான்.
தெமட்டகொட வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஜிகாத் அமைப்பின் துண்டுபிரசுரங்கள் மீட்கப்பட்டது.