சித்தசுவாதீனமற்றவர் என்று கூறப்படும் பெண் குடும்பப் பெண்ணைக் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது.
காயமடைந்த அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி கெருடாவிலில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
48 வயது குடும்பப் பெண் மதிய உணவுக்கான சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே சம்பவம் இடம்பெற்றது.
பசி பொறுக்க முடியவில்லை என்று குடும்பப் பெண்ணின் கையைக் கடித்துக் குதறியுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டது.