தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்காக க்ளைஃபொசெட் பயன்படுத்தப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேயிலை தொடர்பில் சீனாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.