கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுஜனவுடனான கூட்டணி ஆகிய விடயங்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய தேர்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறங்குவதா அல்லது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதா என்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மொட்டுடன் இணைந்து பயணிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

