இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை இனப்படுகொலை என்ற சொல்லை தவறாக பயன்படுத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள கருத்திற்கு மனித உரிமை சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
விஜித ஹேரத் தனது கருத்தின் மூலம் கோட்டபாய ராஜபக்சவின் பாதையில் பயணிக்கின்றார் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் மரிஷா டிஎஸ் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை தவறவிட்டது போன்றுதங்களிற்கு மிகப்பெரும் ஆணை கிடைத்துள்ளதாக தம்பட்டம் அடித்த தேசிய மக்கள் சக்திபொன்னான சந்தர்ப்பத்தை தவறவிடுகின்றது. என தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஆகவேஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் வடக்குகிழக்கு தமிழர்களின் பெரும் ஆணையை பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்பதை கடுமையாக மறுப்பதுடன் கோட்டாபய தெரிவித்த ‘எங்கள் படையினர் மனிதாபிமான யுத்தத்திலேயே ஈடுபட்டனர்சிறுவர்களையும் முதியபெண்களையும் நீரேரி ஊடாக சுமந்து சென்றனர் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை ? என்பதை பின்பற்றுகின்றது.
இலங்கையில் இனப்படுகொலை எதுவும் இடம்பெறாததால்இனப்படுகொலை என்பதை தவறாக பயன்படுத்துபவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கின்றார்.
மே 18 நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்விமான்கள் போன்றவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.
இது பேச்சு சுதந்திரத்தை தெளிவாக மீறும் செயலாகும்.
ராஜபக்சவை தூண்டியமைக்காகவும் இறுதி யுத்தத்தில் கடும் ஆட்டிலறி தாக்குதல்களை மேற்கொண்டு முடித்துவிடுமாறு தூண்டியமைக்காகவும் தமிழர்களின் காலுகளில் விழுந்து தங்களை மன்னிக்குமாறு கோருவதற்கு பதில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தேசிய மக்கள் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என கண்மூடித்தனமாக மறுக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை தவறவிட்டது போன்றுஇதங்களிற்கு மிகப்பெரும் ஆணை கிடைத்துள்ளதாக தம்பட்டம் அடித்த தேசிய மக்கள் சக்திஇபொன்னான சந்தர்ப்பத்தை தவறவிடுகின்றது.
ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் இது குறித்து ஆச்சரியப்படவில்லைஇஅனுரகுமார பதவியேற்பது குறித்து பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்தியாரத்ன கூறிய முதல் விடயங்களில் ஒன்றுஇ30 ஆண்டுகால போர் வெற்றியை விட பெரியது என்றார்.
எனவே அடிப்படையில் ஜேவிபி இனவெறி கட்சி என்பது குறித்தும் பௌத்த சிங்கள சொல்லாட்சியை தொடர்ந்து நிலைநிறுத்துகின்றது என்பது குறித்தும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
.இந்தப் பிரச்சினைகள் பலவற்றில் பல தசாப்தங்களாக எங்களுடன் இணைந்து போராடி வரும்இ இப்போதுதேசிய மக்கள் சக்தியின் யின் ‘சிறந்த ரசிகர்களாக’ இருக்கும் நமது நண்பர்களும் தோழர்களும் தேசிய மக்கள் சக்தியின் மீதான இந்த குருட்டு நம்பிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு இந்த அரசாங்கத்தை அதன் செயல்கள் செயலற்ற தன்மை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்குப் பொறுப்பேற்கத் தொடங்குவது எப்போது?