அதிபர் பதவியில் இருந்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவதற்காக, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் செயற்பட்டதாக தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அவர்கள் இருவரும் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிகழ்ச்சியில் நேற்றிரவு(14) இடம்பெற்ற கலந்து கொண்ட போது திலித் ஜயவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணியில் மகிந்த குடும்பம்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கான சதித்திட்டத்தை பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் முன்னெடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அப்போதைய அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் கீழ் பல பொறுப்பு வாய்ந்த அமைச்சுக்கள் இருந்ததாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.