Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாபயவுக்காக ரணில் போடும் டொனமூர் அரசியலமைப்பு முடிச்சு

June 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டாபயவுக்காக ரணில் போடும் டொனமூர் அரசியலமைப்பு முடிச்சு

ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்த 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவது சம்பந்தமாக விரிவான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

இவ்வாறான நிலைமையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரங்களை நீக்குவதற்கு பதிலாக வேறு வகையான யோசனைகளை கொண்டு வந்து, அரசியல் பொறியை வைத்து வருவதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தின் தெரிவுக்குழு

கோட்டாபயவுக்காக ரணில் போடும் டொனமூர் அரசியலமைப்பு முடிச்சு

கடந்த மே 29 ஆம் திகதி விசேட உரை ஒன்றை நிகழ்த்த ரணில் விக்ரமசிங்க, டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த தெரிவுக்குழு முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

நேரடியாக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக பிரதமர், இவ்விதமாக மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய சிறிய வழிமுறைகைள கையாண்டு வருகிறார் எனவும் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

டொனமூர் அரசியலமைப்புச் சட்டம் 1931 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர் கொண்டு வரப்பட்ட சோல்பரி அரசியலமைப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதுடன் அது 1977 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இவ்வாறான நிலையில், மீண்டும் டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவாக 10 தெரிவுக்குழுக்களை நியமிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

இதன் மூலம் அவர் அரசியல் ரீதியான தந்திரம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கோட்டாபயவுக்காக ரணில் முன்வைக்கும் யோசனைகள்

2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, போத்துகேயர் இலங்கையை ஆக்கிரமித்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை உற்சவமாக கொண்டாட திட்டமிட்டார்.

தற்போது அதே விதத்தில் ஆங்கில ஏகாதிபத்திய காலத்தில் இருந்த துதிப்பாடும் முறையை கூறி சமூகத்தை தவறான வழிநடத்த பல்வேறு வழிமுறைகளை முன்னெடுத்து வருகிறார் எனவும் கோட்டாபய ராஜபக்சவுக்காகவே அவர் டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் கொண்டு வருவது தொடர்பிலான யோசனைகளை முன்வைப்பதாகவும் அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Previous Post

கச்சதீவினை மீள பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் | சி.வி.கே சிவஞானம்

Next Post

ரஜினியை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

Next Post
ரஜினியை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

ரஜினியை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures