2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (Financial Crimes Investigation Department) குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. லக்ச்மன் ஜெயவர்தன இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு செய்யப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, தமது சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு மாநாட்டு மண்டபத்தை நிர்மாணிப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோடிக்கணக்கில் மாயமான அரசாங்க பணம்: சிக்கிய மைத்திரி | Government Money Misused During The Maithri Regime
குறித்த கட்டுமானம் 2019 ஜனவரியில் ஆரம்பித்தது இருப்பினும், வளாகத்தில் இருந்த பல வியாபாரத்தளங்கள், கதவுகள், ஜன்னல்கள், கூரைத் தகடுகள் மற்றும் இருக்கைகள் அகற்றப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 130 மில்லியன் ரூபாய்களாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டது ஆனால் இன்றுவரை அந்த திட்டம் முழுமையடையாமல் உள்ளது என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.