Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 அணிகள்

March 20, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மில்லர், திவாட்டியா அதிரடி – பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

உலக கிரிக்கெட் அரங்கில் தொழில்முறை கிரிக்கெட்டில் அதி உயரியதும் கோடானகோடி ருபாவை பணப்பரிசாக அள்ளி வழங்குவதுமான ஐபிஎல் என சுருக்கமாக அழைக்கப்படும் இண்டியன் பிரீமியர் லீக் ரி20 கிரிக்கெட் தொடரின் 18ஆவது அத்தியாயம் சனிக்கிழமை (22) நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இன்டியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பை ஏற்படுத்துவதுடன் ஆயிரக்கணக்கான இரசிகர்களையும் போட்டி நடைபெறும் அரங்குகளுக்கு சுண்டி இழுக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் இப் போட்டிகளை கண்டு இரசிக்கின்றனர்.

இப் போட்டியில் தலா 5 தடவைகள் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ், 3 தடவைகள் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , அங்குரார்ப்பண அத்தியாயத்தில் சம்பியனான ராஜஸ்தான் றோயல்ஸ், முன்னாள் சம்பியன்களான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகியவற்றுடன் டெல்ஹி கெப்பிட்டல்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய பத்து அணிகள் பங்குபற்றுகின்றன.

இரண்டாவது அத்தியாயத்தில் (2009) சம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் 2012க்குப் பின்னர் இயங்கவில்லை. அவ்வணிக்கு பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணைத்துக்கொள்ளப்பட்டது.

குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகியன 2022இலிருந்து விளையாடி வருகின்றன. இந்தப் பத்து அணிகளும் இரண்டு குழுக்களாக வகுக்கப்பட்டுள்ளன.

ஏ குழுவில் 1. சென்னை சுப்பர் கிங்ஸ், 2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 3. ராஜஸ்தான் றோயல்ஸ், 4. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, 5. பஞ்சாப் கிங்ஸ் ஆகியனவும் 

பி குழுவில் 1. மும்பை இன்டியன்ஸ், 2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 3. குஜராத் டைட்டன்ஸ், 4. டெல்ஹி கெப்பிட்டல்ஸ்,   5. லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகியனவும் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு அணியும் தத்தமது குழுக்களில் இடம்பெறும் அணிகளுடனும் தத்தமது ஒத்த வரிசைகளில் பி குழுவில் இடம்பெறும் அணிகளுடனும் தலா இரண்டு தடவைகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு தடவையும் மோதும்.

உதாரணத்திற்கு, சென்னை சுப்பர் கிங்ஸ் தனது குழுவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு தடவைகளும் பி குழுவில் தனது ஒத்த வரிசையில் உள்ள மும்பை இன்டிய்ன்ஸுடன் இரண்டு தடவைகளும் விளையாடும். பி குழுவில் உள்ள மற்றைய 4 அணிகளுடன் ஒரு தடவை விளையாடும்.

இதன்படி ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும். இதற்கு அமைய லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடத்தப்படும்.

லீக் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் ஒட்டுமொத்த நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் முதலாவது தகுதிகாண் சுற்றில் விளையாடும்.

இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகள் நீக்கல் போட்டியில் விளையாடும்.

முதலாவது தகுதிகாணில் தோல்வி அடையும் அணியும் நீக்கல் போட்டியில் வெற்றிபெறும் அணியும் இரண்டாவது தகுதிகாணில் விளையாடத் தகுதிபெறும்.

இரண்டு தகுதிகாண் போட்டிகளிலும் வெற்றிபெறும் அணிகள் சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மே மாதம் 25ஆம் திகதி ஒன்றையொன்று எதிர்த்தாடும்.

இன்டியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பிரபல்யமான சர்வதேச வீரர்களும் இந்திய தேசிய மற்றும் உள்சூர் வீரர்களும் இடம்பெறுவதால் ஒவ்வொரு போட்டியும் ஒன்றுக்கொன்று விறுவிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக அமைகின்றது.

அணிகள் விபரம் 

சென்னை சுப்பர் கிங்ஸ்: துடுப்பாட்ட வீரர்கள் – ருத்துராஜ் கய்க்வாட் (தலைவர்), அண்ட்றே சித்தார்த், வான்ஷ பேடி, டெவன் கொன்வே, எம்.எஸ். தோனி, ஷெய்க் ராஷீத், ராகுல் த்ரிப்பதி. சகலதுறை வீரர்கள் – ரவிச்சந்திரன் அஷ்வின், சாம் கரன், ஷிவம் டுபே, ராமகிரிஷ்ணா கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், தீப்பக் ஹூடா, ரவிந்த்ர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ரச்சின் ரவிந்த்ரா, விஜய் ஷங்கர். பந்துவீச்சாளர்கள் – கலீல் அஹமத், நேதன் எலிஸ், குர்ஜப்னீத் சிங், முக்கேஷ் சௌதரி, கம்லேஷ் நாகர்கோட்டி, நூர் அஹ்மத், மதீஷ பத்திரண.

டெல்லி கெப்பிட்டல்ஸ்: துடுப்பாட்ட வீரர்கள் – அபிஷேக் போரெல், பவ் டு ப்ளெசிஸ், ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க், கருண் நாயர், கே.எல். ராகுல், சமீர் ரிஸ்வி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ். சகலதுறை வீரர்கள் – அக்சார் பட்டேல் (தலைவர்), தசுன் ஷானக்க, டொனவன் பெரெய்ரா, அஜய் மண்டல், மன்வன்த் குமார், அஷுட்டோஷ் ஷர்மா, மாதவ் திவாரி. பந்துவீசசாளர்கள் – துஷ்மன்த சமீர, குல்தீப் யாதவ், தங்கராசு நடராஜன், விப்ராஜ் நிகம், மோஹித் ஷர்மா. மிச்செல் ஸ்டாக், த்ரிபூரண விஜய்.

குஜராத் டைட்டன்ஸ்: துடுப்பாட்ட வீரர்கள் – ஷுப்மான் கில் (தலைவர்), அனுஸ் ராவத், ஜொஸ் பட்லர், குமார் குஷக்ரா, ஷேர்ஃபேன் ரதர்பர்ட், சாய் சுதர்சன், எம். ஷாருக் கான். சகலதுறை வீரர்கள் – கரிம் ஜனத், மஹிபால் லொம்ரோ, க்ளென் பிலிப்ஸ், ராஷித் கான், நிஷாந்த் சிந்து, மானவ் சுதார், ராகுல் தெவாட்டியா, வொஷிங்டன் சுந்தர். பந்துவீச்சாளர்கள் – அர்ஷாத் கான், ஜெரால்ட் கோயெட்ஸி, குர்னூர் ப்ரார், குலவந்த் கேஜ்ரோலியா, மொஹம்மத் சிராஜ், ப்ராசித் கிரிஷ்ணா, கெகிசோ ரபாடா, சாய் கிஷோர், இஷாந்த் ஷர்மா, ஜயந்த் யாதவ்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: துடுப்பாட்ட வீரர்கள் – அஜின்கியா ரஹானே (தலைவர்), குவின்டன் டி கொக், மனிஷ் பாண்டே, ரோவ்மன் பவல், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ராமன்தீப் சிங், ரின்கு சிங், லூவிந்த் சிசோடியா. சகலதுறை வீரர்கள் – மொயீன் அலி, வெங்கடேஷ் ஐயர், சுனில் நரேன், அன்குல் ரோய், அண்ட்றே ரசல். பந்துவீச்சாளர்கள் – வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜோன்சன், மயான்க் மார்கண்டே, அன்ரிச் நோக்கியா, சேத்தன் சக்காரியா, வருண் சக்ரவர்த்தி, உம்ரன் மாலிக்.

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்: துடுப்பாட்ட வீரர்கள் – ரிஷாப் பன்ட் (தலைவர்), அப்துல் சமாத், அயுஷ் படோனி, மெத்யூ ப்ரீட்ஸ், ஆரியன் ஜுயல், டேவிட் மில்லர், நிக்கலஸ் பூரன். சகலதுறை வீரர்கள் – யுவ்ராஜ் சௌதரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகார், அர்ஷின் குல்கர்ணி, ஏய்டன் மார்க்ராம், மிச்செல் மார்ஷ், ஷாபாஸ் அஹ்மத். பந்துவீச்சாளர்கள் – ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், மொஷின் கான், ப்றின்ஸ் யாதவ், டிக்வேஷ் ராதி, ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த், மயன்க் யாதவ்.

மும்பை இன்டியன்ஸ்: துடுப்பாட்ட வீரர்கள் – பெவன் ஜேக்கப்ஸ், ரொபின் மின்ஸ், நாமன் தீர், ரெயான் ரிக்ல்டன், ரோஹித் ஷர்மா, கிரிஷ்ணன் ஷ்ரிஜித், சூரியகுமார் யாதவ். சகலதுறை வீரர்கள் – ஹார்திக் பாண்டியா (தலைவர்), ராஜ் பாவா, கோர்பின் பொஷ், வில் ஜெக்ஸ், மிச்செல் சென்ட்னர், திலக் வர்மா. பந்துவீச்சாளர்கள் – அஷ்வானி குமார், ட்ரென்ட் போல்ட், ஜஸ்ப்ரிட் பும்ரா, தீப்பக் சஹார், முஜீப் உர் ரஹ்மான், விக்னேஷ் புத்துர், சத்யநாராயண ராஜு, கர்ண் ஷர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், ரீஸ் டொப்லே, ஏ.எம். கஸன்பர், லிஸாத் வில்லியம்ஸ்.

பஞ்சாப் கிங்ஸ்: துடுப்பாட்ட வீரர்கள் – ஷ்ரேயாஸ் ஐயர் (தலைவர்), ப்ரியன்ஸ் ஆரியா, பிலா அவினாஷ், ஹர்னூன் சிங், ஜொஷ் இங்லிஸ், ப்ரப்சிம்ரன் சிங், விஷ்ணு வினோத், நெஹால் வதீரா. சகலதுறை வீரர்கள் – அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ஆரோன் ஹார்டி, மார்கோ ஜென்சன், க்லென் மெக்ஸ்வெல், முஷீர் கான், ஷஷான்க் சிங், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், சூரியன்ஷ் ஷெஜ். பந்துவீச்சாளர்கள் – அர்ஷ்தீப் சிங், ஸேவியர் பார்ட்லெட், யுஸ்வேந்த்ர சஹால், ப்ரவீன் டுபே, லொக்கி பேர்கசன், ஹார்ப்ரீட் ப்ரார், குல்தீப் சென்.

ராஜஸ்தான் றோயல்ஸ்: துடுப்பாட்ட வீரர்கள் – சஞ்சு செம்சன் (அணித் தலைவர்), ஷுபம் டுபே, ஷிம்ரன் ஹெட்மயர், யஷஸ்வி ஜய்ஸ்வால், துருவ் ஜுரெல், ரியான் பரக், நிட்டிஷ் ராணா, குணல் சிங் ரத்தோர், வைபவ் சூரியவன்ஷி. சகலதுறை வீரர் – வனிந்து ஹசரங்க. பந்துவீச்சாளர்கள் – ஜொவ்ரா ஆச்சர், அஷோக் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே, பஸால்ஹக் பாறூக்கி, குமார் கார்த்திகேயா, க்வேனா மபாக்கா, சந்தீப் ஷர்மா, மஹீஷ் தீக்ஷன, யுத்விர் சிங்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு: துடுப்பாட்ட வீரர்கள் – ராஜாத் பட்டிடார் (தலைவர்), ஸ்வாஸ்டிக் சிக்காரா, டிம் டேவிட், விராத் கோஹ்லி, தேவ்டத் படிக்கல், பில் சோல்ட், ஜிட்டேஷ் ஷர்மா. சகலதுறை வீரர்கள் – ஜேக்கப் பெத்தெல், மனோஸ் பாண்டகே, லியாம் லிவிங்ஸ்டோன், மொஹித் ராதீ, க்ருணல் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட். பந்துவீச்சாளர்கள் – அபினந்தன் சிங், ஜொஷ் ஹேஸ்ல்வூட், புவ்ணேஷ்வர் குமார், லுங்கி எங்கிடி, ராஷிக் சலாம், சுயாஷ் ஷர்மா, ஸ்வன்பில் சிங், நுவன் துஷார, யாஷ் தயாள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: துடுப்பாட்ட வீரர்கள்: ட்ரவிஸ் ஹெட், இஷான் கிஷான், ஹெய்ன்றிச் க்ளாசென், சச்சின் பபி, அனிகெட் வர்மா. சகலதுறை வீரர்கள் – அபிஷேக் ஷர்மா, அபினவ் மனோகர், கமிந்து மெண்டிஸ், வியால் முல்டர், நிட்டிஷ் குமார் ரெட்டி, ஆதர்வ டைடே, ப்றய்டன் கார்ஸ். பந்துவீச்சாளர்கள் – பெட் கமின்ஸ் (தலைவர்), ராகுல் சஹார், ஏஷான் மாலிங்க, மொஹம்மத் ஷமி, ஹர்ஷால் பட்டேல், சிமர்ஜீத் சிங், ஜெய்தேவ் உனத்காட், அடம் ஸம்ப்பா, ஸீஷான் அன்சாரி.

Previous Post

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல் 

Next Post

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து 

Next Post
இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து 

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures