நாட்டில் ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் , மதவழிபாடுகள் உள்ளிட்ட உற்சவங்கள் மற்றும் மரண சடங்குகள் என்பவற்றில் அளவுக்கதிகமான மக்கள் ஒன்று கூடியமை மற்றும் இது போன்ற சந்தர்ப்பங்களில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமை என்பவையே இதற்கான காரணமாகும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட எழுமாற்று கொவிட் பரிசோதனைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. முன்னரைப் போன்று பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட்டால் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]