கொழும்பு மா நகர சபையின் முதல் பெண் மேயராக, ரோஸி சேனாநாயக்க பதவியேற்கவுள்ளார்.
கொழும்பு மா நகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 1 இலட்சத்து 31 ஆயிரத்து 353 வாக்குகளைப் பெற்று, 60 ஆசனங்களை தன் வசப்படுத்தியுள்ளது.
புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம், 110 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மா நகர சபையில் 60 உறுப்பினர்களைக் கொண்ட தொகையை, ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ளமையினால், தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால், ரோஸி சேனாநாயக்கவை மேயராகக் கொண்ட நிர்வாகம் அமைக்கப்படவுள்ளது.
ரோஸி சேனாநாயக்க, எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுப நேரத்தில், கொழும்பு மா நகரின் முதல் பெண் மேயராக பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

