Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொழும்பு மக்கள் அநாதரவாகவே உள்ளனர்!

December 26, 2017
in News, Politics
0

கொழும்பில் பாரிய கட்டடங்களும், ஹோட்டல்களும் கட்டப்படுகின்றபோதும், கொழும்பு மக்களின் உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் தவிறயுள்ளார்கள். எனவே, கொழும்பு மக்கள் அநாதரவாக உள்ளனர் என்று NFGG யின் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) தலமைத்துவ சபை உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான ஹனான் ஹுஸைன் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், நாம் கொழும்பு மக்களின் தேவைகளைப் புரிந்து, அதற்கேற்றாற் போல் நிலைத்து நிற்கும் அபிவிருத்திகளை ஏற்படுத்த விரும்புகின்றோம். எனவே, மோசமான அரசியல்வாதிகளை கடிந்து கொள்வதோடு நின்றுகொள்ளாமல், சிறந்த வேட்பாளர்களுக்கு பொது மக்கள் வாக்களிக்க வேண்டும்.

கொழும்பு மக்களின் சுகாதாரம், சந்தோசமான வாழ்வு, கல்வி என்று எல்லாத் துறைகளுமே கவனிப்பாறற்றுக் கிடக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால், கொழும்பு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் அரசியல்வாதிகள கொழும்பு மக்களின் தேவைகளை சரிவரப் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, கொழும்பு மக்களின் அடிப்படை வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்ப்பதுவே எமது முக்கிய இலக்காக இருக்கின்றது.

இந்த மாநாகர சபைத் தேர்தலில் எமது NFGG கட்சி முதல் தடவையாகப் போட்டியிடுகின்றது. எனினும், எமது வேட்பாளர்கள் கடந்த இரு தசாப்தங்களாக சமூக விவகாரங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர்களே. எனவே, கொழும்பு மக்களின் பிரச்சினைகளை சரிவரப் புரிந்த வேட்பாளர்களே எமது கட்சியில் களமிறங்கியுள்ளனர்.

நாம் கொழும்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விரும்புகின்றோம். எனவே, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, போதிய வாழ்க்கை வசதிகள் இல்லாத மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட விரும்புகின்றோம். கொழும்பு மாநகர சபை ஊடாக, பொது மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை வினைத்திறனாக வழங்க விரும்புகின்றோம்.

கொழும்பின் எல்லாப் பக்கங்களிலும் மிகவும் சிறிய வீடுகளில் பல குடும்பங்கள் வாழ்கின்ற நிலையே காணப்படுகின்றது. இக்குடும்பங்கள் வாழ்விடங்களின்றி மிகவும் கஷ்டப்படுகின்றன. இவர்களுக்கான வீடுகள், குடியிருப்புக்கள் ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது.

இன்னுமொரு புறத்தில் கொழும்பு இளைஞர்கள் பயனுள்ள வகையில் ஓய்வு நேரங்களைக் கழிப்பதற்கான வாய்ப்புக்கள் கொழும்பில் இல்லை. சிறுவர் பூங்காக்கள், போதிய மைதான வசதிகள் இல்லாமையினாலேயே, சில இளைஞர்கள் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர்.

எனவே, கொழும்பு மக்களின் வாழ்க்கையை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கு, சில அடிப்படையான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருக்கின்றது. இதில் நாம் அதிக அக்கறையுடன் செயற்படுவோம் – என்று தெரிவித்தார்.

Previous Post

நத்தார் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற மோதல்

Next Post

ஹக்கீம்க்கு மக்கள் எப்படியான தீர்ப்பை வழங்க போகின்றனர்

Next Post

ஹக்கீம்க்கு மக்கள் எப்படியான தீர்ப்பை வழங்க போகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures